31 March, 2023

பக்கா ஸ்கெட்ச்! ஹாஸ்டலுக்குள் காதலியை கூட்டிச்செல்ல பலே பிளான் போட்ட காதலன்! கடைசியில் ஒரு ட்விஸ்ட்

tamil cinema : கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள ‘மனிப்பால்’ என்ற ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவில், கல்லூரி மாணவர் இரவில் மிகப்பெரிய சூட்கேஸ் ஒன்றுடன் தட்டுத்தடுமாறி நடந்து கல்லூரியின் விடுதிக்கு வருகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் அந்த மாணவரின் கொண்டு வந்த சூட்கேஸ் மிகப்பெரிய அளவில் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதியின் பாதுகாவலர்கள், அதில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர்

ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை எடுத்து வருவதாக அந்த கல்லூரி மாணவர் கூறியபோதும், சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள விரும்பிய பாதுகாவலர்கள் சூட்கேசை திறந்துகாட்டுமாறு கூறியிருக்கின்றனர். அந்த மாணவர் எவ்வளவோ சாக்கு போக்கு கூறி சமாளித்த போதிலும், பாதுகாவலர்களை சமாளிக்க இயலவில்லை. இதனையடுத்து அந்த சூட்கேசின் ஜிப்பை திறந்த போது, அதனுள் ஒரு பெண் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்த செக்யூரிட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் அந்த மாணவரின் காதலி தான். விடுதிக்குள் அந்நியர்கள் யாரையும் உள்ளே விட மாட்டார்கள் என்பதால், தந்திரமாக தனது காதலியை சூட்கேசில் மறைத்து உள்ளே கொண்டு செல்ல முயன்றபோது தான் அந்த மாணவரும், காதலியும் கையும் களவுமாக சிக்கியிருக்கின்றனர். அந்த காதலியும் அதே கல்லூரி மாணவி எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களின் ஹாட்டாக பரவி வருகிறது.