tamil cinema : உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் 13 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், குஷிநகர் மாவட்டத்தில் திருமணம் ஒன்றிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் சென்றிருக்கிறார்கள். அப்போது திருமண வீட்டின் அருகே ஒரு பெரிய கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றின் மேல் இரும்பு வலை போடப்பட்டிருந்தது.
திருமணத்திற்கு சென்றவர்கள் அந்த இரும்பு வலை மீது நின்றிருக்கிறார்கள். அதிக பாரம் தாங்காமல் அந்த இரும்பு கம்பி திடீரென்று உடைந்தது. அப்போது, கிணற்றின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.
அந்த ஆழமான கிணறு. இரவு என்பதால் விழுந்த கிணற்றில் இருளில் மூழ்கினர். இருளில் எதுவும் தெரியாமல் மேலே வர முடியாமல் பெண்கள் தத்தளித்தனர். இரவு நேரம் மேலே இருப்பவர்களுக்கு சட்டென்று யாரையும் மீட்க முடியவில்லை.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் 13 பெண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.