tamil cinema : இணையத்தில் வைரலாக கூடிய சில வீடியோக்கள் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடிக்க கூடியதாக இருக்கும். அந்த வகையில், மற்றவர்களின் உயிரை காப்பற்றவது, பிறருக்கு உதவி செய்வது, வாழ்க்கைக்கான உதாரணங்கள் கொண்ட வீடியோ போன்றவை எளிதில் வைரலாகி விடும். இதற்கு முக்கிய காரணம் மனிதாபிமானம் தான்.
அதிலும் பலர் தனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உதவும் வீடியோக்கள் பல வைரலாக வாய்ப்பு அதிகம். இதே போன்ற ஒரு நிகழ்வு தான் தெலங்கானாவில் நடந்துள்ளது.
இதில் தனது உயிரையே பணயம் வைத்து ஒரு நாயை காப்பாற்றி உள்ளார் ஒருவர். இவர் நாயை காப்பாற்றும் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டதையடுத்து அவர் ஹீரோவாகவும் புகழப்பட்டு வருகிறார்.
இந்த வீடியோவில் அதிக வெள்ளத்தை கூட பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்ற அவர் தனது உயிரைப் பணயம் வைப்பதை மிகவும் பயம்கொள்ளும் உணர்வுடன் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை யார் பார்த்தாலும் இவரின் நல்ல மனதை நிச்சயம் பாராட்ட தோன்றும்.
तेज़ लहरों के बीच फंसे कुत्ते को देखकर @TelanganaCOPs के होम गार्ड मुजीब ने तुरंत JCB बुलाई और खुद उसे बचाने के लिए लहरों में उतर गए. उनके जज्बे को दिल से सलाम.
मानवता की सेवा के लिए #Khaakhi कोई भी जोखिम उठाने से पीछे नहीं हटती. pic.twitter.com/sJlBoOwvov— Dipanshu Kabra (@ipskabra) January 25, 2022