tamil cinema : ஹோலி பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ணங்களின் திருவிழாவாகவும், மகிழ்ச்சி மற்றும் தீமையை, நன்மை வெற்றி கொண்டதற்கான அடையாளம் ஆகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்துக்களின் திருவிழாவாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போதிலும், பிற மத நம்பிக்கை சார்ந்தவர்களும் ஹோலியை கொண்டாடி வருகின்றனர். நாட்டில் வசந்தகால அறுவடையின் தொடக்கத்தினை குறிக்கும் வகையில் ஹோலியை மக்கள் கொண்டாடுகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது. விலங்குகள் மீது வண்ண பொடிகளை தூவியும் சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதுண்டு. இதுபற்றி கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள விலங்குகள் மற்றும் கால்நடை துறையின் துணை இயக்குனர் வெளியிட்டு உள்ள செய்தியில், ரசாயன அல்லது இயற்கை வண்ண பொடிகள் விலங்குகளின் தோல், வாய், கண் அல்லது மூக்கு வழியாக அவற்றின் உடலுக்குள் செல்ல முடியும்.
விலங்குகளின் மீது வண்ண பொடிகளை பூசுவது, தூவுவது போன்ற சம்பவங்கள் நடப்பது அறியப்பட்டால், இந்த சட்டத்தின் விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்