tamil cinema : வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் டி இமான். அஜித்தின் விசுவாசம் படத்தில் இவர் இசையமைத்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சிவகார்த்திகேயனின் படங்களில் இவருடைய இசை வேற லெவல் காம்போவில் இருக்கும்.
மோனிகா ரிச்சர்ட் என்பவரை டி இமான் 2008-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக டி இமான் அறிவித்தார்.
இந்நிலையில் இவருக்கு மறுமணம் நடக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது.அதாவது டி இமானின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இவருக்கு திருமணம் செய்ய உள்ளார்கள் என்ற கூறப்பட்டது. அதன்படி இன்று மே 15ஆம் தேதி டி இமானுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

tamil cinema
பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை தான் டி இமான் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மணமக்களுடன் சங்கீதா அவரது கணவர் கிரிஷ் மற்றும் குட்டி பத்மினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.