tamil cinema :மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் (76). இவருக்கு அவரது 42 வயது மருமகள் நேற்று காலை தேநீர் வழங்கியதாக தெரிகிறது.
அப்போது, அதனுடன் காலை உணவும் வழங்காததால் காஷிநாத் ஆத்திரமடைந்துள்ளார். இதில் காஷிநாத்துக்கும் அவரது மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, கோபத்தில் காஷிநாத் தனது துப்பாக்கியை எடுத்து மருமகளை நோக்கி சுட்டுள்ளார். இதில், மருமகளின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மற்றொரு மருமகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பு, காஷிநாத் மீது பொலிசில் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.