31 March, 2023

4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பல்லி..வைரலாகும் பதிவுகள்!

tamil cinema : மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் கன்டோலி தேசிய பூங்கா பகுதிக்குள் 4 பேர் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் கொங்கன் பகுதியில் இருந்த காட்டுக்குள் வேட்டை விலங்குகளை தேடி அலைந்தனர். ஆனால், அவர்களின் கண்ணில் மானிட்டர் வகையை சேர்ந்த பல்லி ஒன்று தென்பட்டுள்ளது.

உடனே மங்கேஷ், சந்தீப், ஜனார்தன், அக்‌ஷய் ஆகிய நான்கு பேரும் அந்த பல்லியை பிடித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.அதுமட்டும் இல்லாமல் அந்த கொடூர செயலை தங்களுடைய மொபைல் போனிலும் வீடியோவாக எடுத்துள்ளனர்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் காட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் நான்கு பேரும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

tamil cinema

tamil cinema

உடனடியாக வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து நான்கு பேரையும் விசாரித்தனர்.

பின் அவர்களிடமிருந்த மொபைல் போனை சோதித்துப் பார்த்தபோது அவர்கள் பல்லியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்று போட்டிருக்கிறார்.அதில் அவர், ஒருவேளை பல்லி குட்டையான ஆடைகளை அணிந்து இருந்ததாக நான் நினைக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.இவரை தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் படத்தின் கதாநாயகி தேஜஸ்வினியும் கருத்து வெளியிட்டுள்ளார்.

நிறைய தோல் தெரிந்ததா? குடிபோதையில் இருந்ததா? இந்த உலகம் பாதிக்கப்பட்டவரை எப்படி குற்றம் சொல்ல போகிறது என்பதை அறிய காத்து கொண்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி பிரபலங்கள் பலரும் மகாராஷ்டிரா பல்லியின் பாலியல் வன்கொடுமை குறித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

tamil cinema

tamil cinema