30 May, 2023

குளிப்பதை வீடியோ எடுத்து மகளை ஆசைக்கு இணங்க அழைத்த நபர்..!

tamil cinema : பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான செல்வம் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் குளிப்பதை ஒளிந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த வீடியோவில் உள்ள பெண்ணை மிரட்டிய செல்வம் அவரது மகளை தனது ஆசைக்கு இணங்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அந்த பெண் மறுக்கவே, அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார் செல்வம். இதனால் பதட்டமடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் செல்வத்தையும் அவருக்கு உடந்தையாக இருந்த அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

மேலும், செல்வம் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Share