30 March, 2023

இந்த வயதில் குழந்தையா..? வயதான தம்பதியினர் பிரசவித்த குழந்தை!

tamil cinema : இந்தியாவில் 70 வயதில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில் தற்போது அவரும் இணைந்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 70 வயதான தல்ஜிந்தர் கவுர் என்ற பெண் IVF சிகிச்சைக்குப் பிறகு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.79 வயதான கணவர் மொஹிந்தர் சிங் கில் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றுள்ளார்.

tamil cinema

tamil cinema

 கவுர் இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

என் குழந்தையை என் கைகளால் பிடிக்க முடிந்ததை எண்ணி நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த அழகிய ஜோடி கடந்த 1980 களில் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்ந்துள்ளனர்.

அவர் வளர்ந்த பிறகு அமெரிக்காவில் படிக்கச் சென்றுவிட்டு திரும்பி வரவில்லை.

இறுதியில், ஒரு பத்திரிகையில் கிளினிக்கிற்கான விளம்பரத்தைப் பார்த்த தம்பதியினர் IVF சிகிச்சை மூலம் குழந்தையை பெற்று கொள்ள முடிவு செய்துள்ளனர். தற்போது அவர்களின் நீண்டநாள் ஆசை நிறைவேறியுள்ளது.

அர்மான் என்று பெயரிடப்பட்ட இந்த குழந்தை பிறக்கும் போது 4.4 பவுண்டுகள் எடையுடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லை, குழந்தை மிகவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.