30 May, 2023

தூங்கியதை கேட்டதற்காக ஆசிரியரை வெளுத்து வாங்கும் மாணவன்..! காலக்கொடுமை

tamil cinema : தேனி மாவட்டத்தில் பொலிசாரை கத்தியால் குத்துவேன்… ஆசிரியரை அடிப்பேன் என்று மாணவர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, 3 அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டனர்.

தற்போது வேலூர் மாவட்டம் ஆதனூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரை மாணவன் ஒருவன் கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்க முயலும் காட்சி ஒன்று தற்போது இணையதளத்தில் பரவிவருகிறது.

பள்ளி இறுதி தேர்வு வர உள்ள நிலையில் மாணவன் தேர்விற்கு தயாராகமல் பள்ளி அறையில் தூங்கியதால் மாணவனை கேள்வி கேட்டுள்ளார். இதனால் சக மாணவர் முன்பு ஆசிரியரை தாக்க முயன்றுள்ளான்.

மாணவன் அடிக்க முயலும் போது என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியர் அதிர்ச்சியாகி நிற்கும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்துகிறது. மேலும் மற்றொரு மாணவன் ஆசிரியரை சூழ்ந்து கொண்டு திட்டும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கையில் மது, சிகரெட் போன்ற போதை பொருட்கள் கிடைக்காமல் அரசு செயல்பட வேண்டும் என்று கூறிவருகின்றனர்.