30 March, 2023

மாவுல எச்சில் துப்புவியா? மாமியா வீட்ல களி தின்னு! 6 பேரை அள்ளிய போலீஸ்!

tamil cinema:லக்னோவின் ககோரி காவல் நிலையப் பகுதியில் உள்ள ’இமாம் அலி தாபா’ என்ற கடையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. வீடியோவில், இரண்டு சமையல்காரர்கள் தந்தூரில் ரொட்டி தயாரிப்பதைக் காண முடிந்தது.

அவர்களில் ஒருவர் மாவில் எச்சில் துப்புகிறார். மற்றொருவர் தனது கடமையை கண்ணாகவே செய்துக் கொண்டிருக்கிறார். அவரும் இதை கண்டு கொள்ளவும் இல்லை, கண்டிக்கவும்  இல்லை.

இதைப் பார்க்கும்போது, இது வழக்கமான வேலையைப் போலவே தெரிகிறது. அதாவது, அவர்கள் எச்சில்  துப்புவது முதல்முறை அல்ல, எப்போதுமே இதுபோன்ற அருவருப்பான செயல்களை செய்து சுகாதார கேடு ஏற்படுத்துபவர்கள் என்பதுபோல தோன்றுகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் சாலையோரக் கடைகளில் உணவு தயாரிக்கும்போது எச்சில் துப்பும் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share