30 May, 2023

2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை..ஆனால் உயிர்பிழைக்குமா..?

tamil cinema : இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் அதியமான குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது.

இதனிடையே, அந்த குழந்தையை ரத்லாம் மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.மேல் சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது.

இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும்.

பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.

எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

Share