tamil cinema : ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ளது ஜாடுபுடி கிராமம். இங்கு பிரசித்திபெற்ற எல்லம்மா கோவிலுக்கு மக்கள் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பாப்பா ராவ் என்பவர் கோவிலுக்கு சுவரில் இருந்த ஓட்டை வழியாக திருட சென்றுள்ளார்.

tamil cinema
சுவரின் ஓட்டை வழியாக உள்ளே சென்ற அவர் அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க நகைகளை திருடிவிட்டு, அதே ஓட்டை வழியாக தப்பிக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்துள்ளார். சிறிது நேரத்திற்குள் விடிந்துவிடமே, மக்கள் பாப்பா ராவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக எல்லம்மா கோவில் அருகே திரண்ட கிராம மக்கள், ஓட்டையில் சிக்கி இருந்த பாப்பா ராவை மீட்டு உள்ளனர்.அதன் பிறகு காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பாப்பா ராவை கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலில் அம்மனுக்கு செலுத்தியிருந்த நகைகளை திருட போன நபர், அங்கிருந்த ஓட்டைக்குள் உடல் மாட்டியத்தால் சிக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.