31 May, 2023

சமையல்காரனை நிர்வாணமாக்கி ஓரினசேர்க்கைக்கு அழைத்த மாணவர்கள்..!

tamil cinema : சமையல்காரரரை நிர்வாணமாக்கி கல்லூரி மாணவர்கள் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன்(34). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.

ஓரினச்சேர்க்கையாளரான இவர் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரனை வாலிபர் ஒருவர் செயலியில் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

தனிமையில் இருப்பதற்கு ரயில்வே தண்டவாளத்திற்கு பின்னே வரக்கோரிய இளைஞரின் அழைப்பினை ஏற்று கங்காதரன் குறித்த இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் கத்தியால் கங்காதரனை மிரட்டி அவரை நிர்வாணப்படுத்தி காணொளி எடுத்ததோடு, அவ்வப்போது காணொளியை காண்பித்து மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளனர்.

பின்பு கங்காதரன் பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில், சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த்(21), மாணிக்கம் (20) ஆகியோர் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதில் பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்த பொலிசார் தலைமறைவாக இருக்கும் மாணிக்கத்தை் தேடி வருகின்றனர்.

Share