tamil cinema : 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மாதம் மனப்பூர்வமாகப் பிரிவதாக அறிவித்தனர்.
அதன்படி ‘பயணி’ என்ற வீடியோ சாங்கை இயக்கி வந்த ஐஸ்வர்யாவிற்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமாகியுள்ள ஐஸ்வர்யா அப்பாடலை வெளியிட வேலைகளை செய்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் ஐஸ்வர்யா நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோஸை பதிவிட்டு இருந்தார். இது குறித்த காரணத்தை நடிகர் ராகவா லாரன்ஸை பேட்டியில் கூறியிருந்தார்.

tamil cinema
“தங்கச்சியை சந்தித்தது ரொம்ப சந்தோஷம், நாங்க சந்தித்த காரணத்தை தங்கச்சி அதிகாரப்பூர்வமாக சீக்கிரமே அறிவிப்பாங்க. அதுவரைக்கும், என்னால எதுவும் சொல்ல முடியாது. அவங்க வாழ்க்கையில நடக்குற பற்றி பேச எனக்கு உரிமை இல்ல.
ஆனா, என் தங்கச்சி எப்போவும் சந்தோஷமா இருக்கணும். நல்லா வரணும். எனக்கு லைப் கொடுத்தவர் தலைவர். அவரோட வீட்டு பொண்ணுங்க எப்போவும் நல்லா இருக்கணும்” என ஐஸ்வர்யா குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

tamil cinema