tamil cinema :பலாக்காய் ஒன்றை பறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவமொன்று எல்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கர்ப்பிணி மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது மாமாவின் காணியில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது மாமாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் பின்னர்மாமா குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். மாமா சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.