29 May, 2023

நயந்தாராவின் தயவால் கிடைத்த அதிஸ்டம்..அப்போ நான் இனி நடிக்கலாம்..

tamil cinema : டாக்டர் படத்தின் செல்லம்மா செல்லம்மா, பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ள பாடகி ஜோனிடா காந்தி சினிமாவில் ஹீரோடினாகவும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். நடிகை நயன்தாரா தான் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முக்கிய ஜோடிகளான நயன்தாரா – விக்னேஷ் சிவன் மற்ற ஜோடிகளுக்கும் ரிலேஷன்ஷிப் இலக்குகளை நிர்ணயித்து வருகிறார்கள். தாங்கள் காதலில் விழ காரணமாக இருந்த நானும் ரவுடி தான் படத்தின் நினைவாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘கூழாங்கல்’, ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ மற்றும் ’ஊர்க்குருவி’ ஆகியப் படங்களை தயாரித்திருக்கிறது. இதில் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கியுள்ளார். இதில் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு நண்பராக நடித்த கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.