31 March, 2023

வயிற்றில் குழந்தையுடன் காஜல் செய்த சேட்டைய பாருங்க..ஏதும் நடந்தா?

tamil cinema : சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை காஜல் அறிவித்திருந்தார்.இதனிடையே அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ்,தெலுங்கு,இந்தியில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் காஜல் அகர்வால். தமிழில் பரத் நடித்த பழனி படத்தின் மூலம் அறிமுகமானார்.

2020ல் தொழிலதிபர் கௌதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

அவருக்கு அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதற்கிடையில் வயிற்றில் குழந்தையுடன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

பெண் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி அளிக்க காஜல் அகர்வால் ஒர்க் அவுட் செய்கிறார். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/Cag262RBpRm/?utm_source=ig_web_button_share_sheet

 

Share