tamil cinema : புஷ்பா படத்தில் வரும் ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. சமந்தா முதல் முறையாக இப்படி கவர்ச்சியாக ஆடுகிறார் என்பதும் பாடல் பெரிய ஹிட் ஆக காரணம். அவரஹ்டு நடனமும் அதிகம் ரசிகர்களை ஈர்த்தது.
ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் அமைத்தது கணேஷ் ஆச்சார்யா தான். அவர் பாலிவுட்டில் மிக பிரபலமான நடன இயக்குனர் மற்றும் நடிகர்.
அவர் மீது துணை நடன இயக்குனராக பணியாற்றிய பெண் ஒருவர் கடந்த 2020ல் பாலியல் புகார் அளித்தார். அந்த வழக்கு விசாரணையின் சார்ஜ்ஷீட்டை போலீசார் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கின்றனர்.

tamil cinema
கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவரது அசிஸ்டன்ட் ஆகியோர் மீது பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 354-a (sexual harassment), 354-c, 354-d உள்ளிட்ட மேலும் பல பிரிவுகளில் குற்றம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கணேஷ் ஆச்சார்யா அவரது அலுவலகத்தில் அந்த பெண்ணுக்கு ஆபாச படம் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியது, மோசமாக பேசி, தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பாலிவுட்டில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அவர் கேட்டதற்கு அந்த பெண் மறுத்ததாகவும், அதற்கு பிறகு நடன இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து அந்த பெண்ணை நீக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாகவும் அவர் புகாரில் கூறி இருந்தார்.

tamil cinema
ஆனால் கணேஷ் ஆச்சார்யா அந்த புகாரை மறுத்திருந்தார். “க்ரூப் டான்ஸ் ஆடும் பெண்களில் ஒருவர் தான் அவர், வேறு எதுவும் அவரை பற்றி எனக்கு தெரியாது” என கூறி இருக்கிறார்.
தற்போது சார்ஜ் ஷீட் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்பது இனி தான் தெரியவரும்.