tamil cinema : தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை காயத்ரி சங்கர்.இந்த படத்தில் வரும் ப்பா யார்ரா இந்த பொண்ணு மேக்கப் போட்டு பேய் மாறி என்ற டைலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் காயத்ரிக்கு சினிமாவில் முக்கிய படமாக அமைந்தது.

காயத்ரி 1993 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தனது 19 ஆவது வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டார்.காயத்ரி 2012 ஆம் ஆண்டு 8 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் வெற்றி படமாக அமைந்தது.அதன்பின்னர், இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி போன்ற படங்களில் நடித்துள்ளார்.