tamil cinema : தமிழ் சினிமாவில் மலையாள நடிகையாக இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் கீர்த்தி சுரேஷ். அப்படத்திற்கு பிறகு கிடைத்த வரவேற்பு கீர்த்தி சுரேஷ்-ஐ மிகப்பெரிய இடத்திற்கு கூட்டிச்சென்றது.
முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷை நடிகர் ஜெயம்ரவி பல ஆண்டுகள் கழித்து புக் செய்துள்ளார். எப்படியாவது கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மேடையிலேயே கீர்த்தி முன்பே கேட்டிருந்தார் ஜெயம்ரவி. தற்போது இந்த ஆசை நிறைவேறியுள்ளது.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கவிருந்ததாம். கால்ஷீட் பிரச்சனையாலும் அண்ணாத்த படத்தில் படப்பிடிப்பாலும் அந்த வாய்ப்பை தூக்கிபோட்டார்.
தற்போது, ஜெயம் ரவி அறிமுக இயக்குனரான ஆண்டனி இயக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு காரணம் விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்க ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அதுவும் இல்லாமல் போய் விட்டது.
இப்படியே போனால் தமிழில் காணாமல் போய்விடுவோமா என்ற நிலைக்கு கீர்த்தி சுரேஷ் வந்துள்ளார். இதனால் காமெடி படமாக எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக ரொமான்ஸ் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.