tamil cinema : திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 படத்தின் பிரபலமான மாஸ் டயலாக்கை அச்சடித்து கர்நாடகாவை சேர்ந்த மணமக்கள் ஒரே நாளில் வைரலாகி விட்டனர்.
படத்தில் யாஷ் பேசும் பிரபல டயலாக்குகளில் ஒன்று, Violence, violence, violence…I don’t like violence. But violence liked me. So i can’t avoid it.
படத்தின் டிரைலரிலேயே இடம் பெற்ற இந்த டயலாக் பலருக்கும் பிடித்த டயலாக் ஆனது.

tamil cinema
திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 டயலாக்
கர்நாடகாவை சேர்ந்த ரசிகர் ஒருவருக்கு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இவர் தனது திருமண பத்திரிக்கையில் கேஜிஎஃப் 2 வில் இந்த டயலாக்கை மாற்றி, Marriage, marrriage, marriage. I don’t like it. I avoid. But my relatives like marriage. So I can’t avoid என அச்சிட்டுள்ளார்.
இந்த திருமண அழைப்பிதழின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி, வைரலாகி வருகிறது.
பலருக்கும் ரசிகர்களின் இந்த செயல் சிரிப்பை ஏற்படுத்தினாலும், சோஷியல் மீடியாவில் மணமக்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

tamil cinema