30 March, 2023

குமார் சங்ககாரவின் மனைவியே அந்த வழியில இறங்கிட்டாங்க..!

tamil cinema : இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாராவின் மனைவி யேஹாலி கொழும்பில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்த போதிலும் மக்களின் போராட்டம் தொடர்கிறது. அந்த வகையில் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

tamil cinema

tamil cinema

மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாராவின் மனைவி யேஹாலியும் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், நாட்டின் இளைய தலைமுறையினருக்காக நான் வீதியில் இறங்கியுள்ளேன். எங்கள் மக்கள் மற்றும் இளைனர், யுவதிகளுக்கு எதிர்காலம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.