30 March, 2023

நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது முதல் முத்தம், அப்புறம் நடந்தது…

tamil cinema : இலங்கை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா, 2019ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.

இந்த சீசனில் இரண்டாவது ரன்னராக வந்த இவர், தற்போது நடிப்பில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றியாளரான ஆரியின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது மலையாளத் திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ver 5.25 இன் அதிகாரப்பூர்வ ரீமேக்கான கூகுள் குட்டப்பாவில் தர்ஷன், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோருடன் லொஸ்லியா நடித்து வருகின்றார்.

tamil cinema

tamil cinema

நேர்காணல் ஒன்றில் லொஸ்லியாவிடம், அடுல்ட் படம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, நான் ஸ்கூல் படிக்கும் போது எல்லோரும் சுற்றி நின்று போனில் பார்த்துக்கொண்டிருந்த போது நானும் அவர்களுடன் பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும் ஒன் சைட் காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.

முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்றும் தானும் கொடுத்ததாக லொஸ்லியா உண்மையை உடைத்துள்ளார்.

Share