tamil cinema : பள்ளியிலிருந்து அண்ணன் வருகைக்காக காத்திருக்கும் தம்பி அண்ணனை பார்த்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியில் பள்ளி பேருந்தை தூரத்திலிருந்து பார்த்தவுடன் அந்தச் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததைக் காணலாம். பள்ளிப் பேருந்து அவன் அருகில் வர, அவனது மகிழ்ச்சி மேலும் மேலும் அதிகரிக்கிறது.
ஜன்னலோர இருக்கையில் அண்ணன் அமர்ந்திருப்பதைப் பார்த்து, உலகத்தில் உள்ள சந்தோஷம் எல்லாம் கிடைத்துவிட்டதைப் போல் ரியாக்ட் செய்யும் குழந்தையின் முகபாவங்கள் அற்புதமாய் உள்ளது.
தம்பியின் பாசத்துக்கு உரிய அண்ணன், பேருந்தில் இருந்து இறங்கியதும் ஓடி வந்து தம்பியை கட்டிப்பிடிக்கிறான். தம்பியை அண்ணன் தட்டிக்கொடுத்தால், சுட்டித் தம்பியும் அண்ணனின் முதுகில் தட்டிக் கொடுக்கிறான்.
அட்டகாசமான பாசம் என்று சிலர் பதிவிட்டால், அன்புக்கு அண்ணன், ஆசைக்கு தம்பி என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.