30 May, 2023

காதலிக்கு சப்ரைஸ் கொடுப்பதற்காக, செய்த காரியத்தால் கடைசியில் நடந்த சோகம்..!

tamil cinema :  23 வயதான குறித்த நபர் தனது காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை கொள்வனவு செய்வதற்காக கடையொன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞரிடம் 20 ஜோடி காதணிகள் அடங்கிய நகைப்பெட்டியை உரிமையாளர் காட்டிய நிலையில் திடீரென எடுத்துக் கொண்டு இளைஞர் ஓடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இளைஞனை கைதுசெய்துள்ளனர். நகைப் பெட்டியில் 500,000 ரூபா பெறுமதியான 20 ஜோடி காதணிகள் இருந்துள்ளன.  ​​இரண்டு ஜோடி காதணிகள் அதில் இருக்கவில்லை எனவும், ஓடும் போது காதணிகள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

விசாரணை நடத்திய போது, ​​ராஜகிரியவில் உள்ள தனது காதலிக்கு பரிசாக காதணி ஒன்றை கொள்வனவு செய்ய கடைக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.