tamil cinema : கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை மடோனா செபாஸ்டியன், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரேமம் படத்தில் ஒரு ஹீரோயின் ஆக நடித்து பிரபலமானவர்.
அதன் பின்னர், தமிழில், விஜய் சேதுபதி ஜோடியாக காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களிலும், பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த மடோனா, தற்போது கன்னட மொழியிலும் அறிமுகமாகவிருக்கிறார். இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக மற்ற நடிகைகளைப் போல தனது புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் மடோனா.

tamil cinema

tamil cinema

tamil cinema