tamil cinema : மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் தற்போது தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்ததால் எப்படிப்பட்ட படத்தில் நடிப்பீர்கள் என கேட்டதிற்கு விஜய்யை காதல் படங்களில் பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது.
விஜயுடன் இணைந்து ஒரு காதல் படத்தில் நடிக்க ஆசை என்று பதிலளித்துள்ளார். மேலும் தனுஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு நடிப்பைக் கற்றுக் கொண்டது போல இருக்கிறது. அவர் நல்ல ஒரு வழிகாட்டி என கூறியுள்ளார்.
தனுஷ் தன்னை ‘மால்மோ’ என்று தான் செல்லமாக அழைப்பார் என மாளவிகா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.