23 September, 2023

கணவர் இறந்து ஒரு வருடம் கூட முடியல … பாய் பிரண்ட் உடன் ஆட்டம் போடும் நடிகை

tamil cinema : பிரபல நடிகை ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சனத்தை பெற்று வருகிறது.

தமிழில் மன்மதன், அடங்காதே திரைப்படங்களில் நடித்துள்ளவர் மந்திரா பேடி. இவர் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளதோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.  கணவர் ராஜ் கவுசல் (49) முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார்.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி ராஜ் கவுசல் மாரடைப்பால் மரணமடைந்தார். காதல் கணவரின் மரணத்தால் நடிகை மந்திரா பேடி நிலைகுலைந்து போனார்.

இதனிடையே கணவர் மரணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த மந்திரா பேடி தோழிகள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பது நண்பர்களுடன் வெளியில் செல்வது என இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மந்திரா பேடி தற்போது பகிர்ந்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனது ஆண் நண்பரான அடியின் பிறந்த நாளை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ள மந்திரா பேடி அவருடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளார்.நீச்சல் குளத்தில் இருவரும் கட்டி பிடித்தப்படி நெருக்கமாக உள்ள நிலையில்  அடிக்கு பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதனை கண்ட பலரும் கணவர் இறந்து ஒரு வருடம் கூட முழுசா முடியவில்லை.. அதற்குள் இப்படியா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Share