tamil cinema :ரன் படத்தில் மூலம் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து அவர் விஷாலுடன் இணைந்து நடித்த சண்டக்கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது.
மீரா ஜாஸ்மின் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் பிஸியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் .
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் அவர் தற்போது ஸ்டைலாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.