30 May, 2023

செல்போன் சிக்னலை வைத்து அலெக்காக மீரா மிதுனை தூக்கிய பொலீஸ்..!

tamil cinema : சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பேசி பரபரப்பு ஏற்படுத்துபவர் மீரா மிதுன். அவர் இதுவரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

திருமணம் ஆனதை மறைத்து ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வாங்கியது, பிக் பாஸ் வீட்டில் சேரன் தன்னை தவறாக தொட்டதாக பொய் புகார் கூறியது, சமூக வலைதளங்களில் விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் பற்றி மோசமாக பேசியது..என லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகும்.

அவர் ட்விட்டரில் பட்டியலினத்தவர்கள் பற்றி மிக மோசமாக பேசி வீடியோ வெளியிட்டது பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். முடிந்தால் கைது செய்யுங்க என போலீசுக்கு சவால் விட்டார்.

அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர் அதன் பின் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

ஜாமினில் சென்ற மீரா மிதுன் நேற்று முந்தினர் கோர்ட் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால் அவர் ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்திருக்கின்றனர்.