31 March, 2023

52 வயதில் மறுமணம் செய்த அம்மா… மகன் செய்த அதிரடி செயல்!

tamil cinema: துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தனது குடும்ப நண்பரை  திருமணம் செய்த நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது.

நம்முடைய சமூகத்தில் கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் பாரபட்சமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் ஆங்காங்கே பிள்ளைகள், குடும்பத்தினர் துணையோடு நடக்கும் திருமணங்கள் பலரது பாராட்டையும் பெறும்.

அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்து கொண்டதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் துபாயில் வசிக்கும் ஜிமீத் காந்தி என்பவர் 2013 ஆம் ஆண்டு தனது 44 வயதில் தனது கணவனை இழந்துள்ளார். அதன்பின் 2019 ஆம் ஆண்டு அவருக்கு 3 ஆம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பலமுறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் 2 வருட போராட்டத்திற்கு பிறகு கேன்சரில் இருந்து மீண்டுள்ளார். பின் வயது, மரபு போன்ற பழங்கால காரணங்களையும், கொரோனா போன்ற தற்கால பிரச்சனைகளையும் கடந்து தனது 52 வது வயதில் குடும்ப நண்பர் ஒருவரை மறுமணம் செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மறுமணம் செய்த தம்பதியினருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share