30 May, 2023

மனைவியை விவாகரத்து பண்ணாமல் மற்ற பெண்ணை கர்ப்பமாக்கிய நடிகர்..!

tamil cinema : விஜய் டிவியில் ஒளிபரப்பான‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று மிமிக்ரி, நகைச்சுவை, நடிப்பு என பட்டையை கிளப்பி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நவீன். இதனை தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

தற்போது அவர் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் நவீன் கடந்த 2016-ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

tamil cinema

tamil cinema

இந்நிலையில் தனக்கு நடைபெற்ற திருமணத்தை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக நவீன் திருமணம் செய்ய முயல்வதாக திவ்யா அவர் மீது புகாரளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் நவீனை கைது செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் முதல் மனைவி திவ்யாவிடம் இருந்து நவீன் இன்னும் முறையாக விவாகரத்து பெறவில்லை என தெரிகிறது. அப்படி இருக்கையில் நவீனின் இரண்டாவது மனைவியான கிருஷ்ணகுமாரி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share