tamil cinema : தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து ஹீரோயினாக வந்த நடிகை நிஹாரிகா தற்போது போதை பார்ட்டியில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நடிகர் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாக பாபுவின் மகள் தான் நிஹாரிகா. தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ என்ற படத்தில் நிஹாரிகா ஹீரோயினாக நடித்தார். அந்த படம் பிளாப் ஆனதால் நிஹாரிகா தமிழில் வேறு படங்களை நடிக்கவில்லை.

tamil cinema
நேற்று ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் பப்பில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். அப்போது போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் அங்கு இருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அதில் நடிகை நிஹாரிகாவும் அவரது நண்பர்களும் இருந்திருக்கிறார்கள்.
நிஹாரிகாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடைபெற்று இருக்கிறது. அதன் பின் அவரை விடுவித்து இருக்கின்றனர்.
தற்போது தான் முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது என்பதால் போதை பொருள் பயன்படுத்தினாரா உள்ளிட்ட விஷயங்கள் இனி தான் வெளியில் வரும் என தெரிகிறது.