24 September, 2023

தனுஸ் கைது செய்யப்பட்டாரா..? அதுவும் நிக்கி கல்ராணி வீட்டில்..

tamil cinema:நடிகை நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ஒரு இளம் நடிகை. பெரிய அளவில் ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு நல்ல படங்கள் கொடுத்து வருகிறார்.

அண்மையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இப்போது மீண்டும் தனது பணிகளை துவங்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த தனுஷ் என்பவர் நடிகை வைத்திருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளார். அவர் தான் திருடினார் என்பது சிசிடிவி காட்சியில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசில் நடிகை புகார் அளிக்க திருப்பூரில் தனுஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.