tamil cinema : கைலாசாவில் பாலியல் வன்கொடுமை நடப்பதாக வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பிடதியில் ஆசிரமம் அமைத்து இருந்த நித்தியானந்தா பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.ஜாமீனில் வெளிவந்த அவர் திடீரென மாயமடைந்தார்.
பின்னர், கைலாசா என்ற தானே பெயரிட்டுள்ள நாடு ஒன்றில் தனது சிஷ்யக்களுடன் தலைமறைவாக இருந்து வருகிறார்.அவ்வப்போது வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு மக்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அங்கேயும் பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கியுள்ளார்.இந்நிலையில், சாரா லான்ட்ரி என்ற வெளிநாட்டு பெண் பெங்களூரில் உள்ள பிடதி போலீசாருக்கு, இ- மெயிலில் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கைலாசா என்ற நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என கூறியுள்ளார்.
ஆனால், நித்யானந்தா மீது இ-மெயில் வெளிநாட்டு பெண் அளித்திருக்கும் புகாரின் பேரில் பிடதி போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.மாறாக இ-மெயில் மூலம் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை.
யாருக்கும் பயப்படாமல் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள ஏதாவது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அந்த பெண்ணுக்கு பிடதி போலீசார் பதிலளித்திருக்கிறார்கள்.