2 October, 2023

வடையின் விலை அதிகரிப்பை வித்தியாசமாக காட்சிபடுத்திய நபர்..!

tamil cinema : நுவரெலியா நகரில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வடை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர், வடைகளின் விலைகளை காட்சிப்படுத்தாது, வடையை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலம் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தி வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள் காரணமாக வடையின் விலையையும் அதிகரித்துள்ளதாகவும் விலை அதிகரிப்பு குறித்து நுகர்வோர் விசாரிப்பதால், வடையை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் அந்த வடை வியாபாரி கூறியுள்ளார்.

மூலப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக ஒரு பருப்பு வடையை 20 ரூபாவுக்கும் உளுந்து வடையை 30 ரூபாவுக்கும் சமோசா ஒன்றை 30 ரூபாவுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் அந்த வியாபாரி கூறியுள்ளார்.