30 March, 2023

கண்டவனெல்லாம் உன் பொண்டாட்டிய கூப்பிட்டா சும்மா இருப்பியா.. கொந்தளித்த வெண்பா!

tamil cinema : விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகன் கதாநாயகியை விட அதிகம் பேசப்படும் கதாபாத்திரம் வெண்பா. இதில் நடிகை பரினா தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டுகிறார். இதனால் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அத்துடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பரினா, அவ்வபோது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அதாவது குல்லா, பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு கடந்த சில நாட்களாகவே முஸ்லீம் மற்றும் இந்து சமூகத்தினருக்கு இடையே மத ரீதியான பிரச்சினை நிலவி கொண்டிருக்கிறது, இதுகுறித்து பரினாவிடம் ரசிகர் ஒருவர், ‘இந்தப்  பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள்’ என்று கேட்டு அவருடைய வாயைப் பிடுங்கி உள்ளனர்.

அதற்கு பரினாவும், ‘ஹிஜாப் அணிவது, பொட்டு வைப்பது போன்றவையெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். மற்றவர்கள் யாராவது உங்களது வீட்டிற்கு வந்து உங்களுடைய மனைவியிடம் வேலை ஏவினால் சும்மா இருப்பீங்களா!’ என்று கொந்தளிக்கிறார்.

Share