24 September, 2023

இத முன்னாடியே பண்ணிருக்கணும்..கோவத்தில் மைக்கை விட்டெறிந்த நடிகர்!

tamil cinema :  நடிகர் இயக்குனர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும் ரஹ்மானின் இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

இதில், ரஹ்மானின் மயக்கும் இசையுடன் தொடங்கும் டீசர் 1.38 நிமிடங்கள் ஓடுகிறது. பார்த்திபன் ஏற்கனவே இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், ஏ ஆர்

ரகுமானிடம் பேசுகையில், நாம் ஆரம்பிக்கிற இந்த பாடலை எப்படி ஆரம்பிக்கிறதே தெரியலை நீங்களே ஒரு வழி சொல்லுங்க சார் என கேட்க, அதற்கு ரகுமானும், காத்துக்கிட்டு இருக்காங்க அப்படியே ப்ளே பண்ணலாம் டிராமாலாம் ஒண்ணும் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

tamil cinema

tamil cinema

 

இதனால், கோபமடைந்த நடிகர் பார்த்திபன் அதை முன்னாடியில்ல கேட்கணும் என மைக்கை தூக்கி வீசுகிறார். பின்பு மைக்க கொண்டு வந்து கொடுக்க, இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி ஆரம்பித்துள்ளன.

இது சம்பந்தமாக அவர் மன்னிப்பு கேட்டதாகவும், கூறப்படுகிறது. ஆனால், இதற்கு காரணம் மைக் ஏதோ கோளாறல் அவர் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.