29 May, 2023

மார்பகத்தை பற்றிய கேள்விக்கு தக்க பதிலளித்த நடிகை..!

tamil cinema : தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

தொலைக்காட்சியில் பிரபலமாகி பின் சினிமாவில் அறிமுகமான பிரியா, திரைப்படங்களில் நடித்து பெரியளவில் ரசிகர்களை சேர்த்தார்.

அதன்படி தற்போது அவர் நடிப்பில் யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம் என வரிசையாக படங்கள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா, சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அதன்படி பள்ளியில் தான் சாப்பிட்ட உணவு, வெற்றிமாறன் படத்தில் நடிக்க விருப்பம், தனுஷ் கண்டு வியந்தது உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து வந்தார்.

அப்போது ஒருவர் முகம் சுழிக்கும் வகையில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் “நான் 34டி சகோதரரே. மார்பகங்களை நான் வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையிலும் உள்ள பெண்களுக்கும் மார்பகங்கள் உள்ளது. உங்கள் பார்வையை நீங்கள் அங்கு உற்று நோக்கி பார்த்தாலும் தெரியும், வாழ்த்துக்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.