30 May, 2023

கள்ள சாராயம் காய்ச்ச மாமியாருக்கு உதவிய பெண் அதிகாரி..!

tamil cinema : தர்கா நகரத்தின் பொந்துபிடிய முதலிகம பிரதேசத்தில் உள்ள பெண் பொலிஸாரின் மாமி ஒருவர் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 7500 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு தேவையான காஸ் சிலிண்டரை பெண் பொலிஸ் அதிகாரியே தனது மாமிக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் பொலிஸ் அதிகாரி அளுத்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதாக கூறப்படுகின்றது. இந் நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.