tamil cinema : இந்தியில் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோவான “லாப் அப்” நிகழ்ச்சியை நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார். 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பாகும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்க சிறை போன்ற இடத்தில் 16 பிரபலங்கள் அடைக்கப்பட்டுவார்கள்.
இதனிடையே சென்ற வாரம் நாமினேட் பட்டியலில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இடம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் இருந்து தன்னை காப்பாற்றினால் அவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுப்பேன் என அவர் உறுதியளித்திருந்தார். இதனால் அந்த வாரத்தில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளராக ஆனார்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக கேமரா முன்பு தனது டீ-சர்ட்டை கழற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனைக் கண்ட இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.