30 March, 2023

“இரண்டே நாளில் மகனின் ஆசையும் போனது அவனும் போய்விட்டான்”.. கதறும் தாய்!!!

tamil cinema : அண்டை நாடான இந்தியாவின் தமிழகத் தில் உள்ள நகரம் தான் கடலூர். பிரசாந்த் என்ற அந்த மாணவனின் தந்தை தற்போது உயிரோடு இல்லை என்றபோதும் நமது சிங்கப்பூரில் அவர் பணி செய்து வந்த காலத்தில் கஷ்டப்பட்டு உழைத்த காசை தனது ஒரே மகனுக்காக நல்ல முறையில் சேமித்து வந்துள்ளார்.

ஒரே செல்ல மகன் என்பதால் என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுக்கும் தாய், அண்மையில் தனது மகன் ஆசைப்பட்டு கேட்டான் என்பதற்காக சுமார் 2.78 லட்சம் (இந்திய ரூபாய்) செலவு செய்து ஒரு பைக்கை வாங்கிக்கொடுத்துள்ளார். புது வண்டி கிடைத்த சந்தோஷத்தில் பிரசாந்த் அதை தனது நண்பனிடம் காட்ட தொழுதூர் என்ற இடத்தை நோக்கி தலைக்கவசம் இல்லாமல் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது ஒரு சாலை வளைவில் வேகத்தை குறைக்கா மல் வண்டியை திருப்ப, அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி பிரசாந்த் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இன்று அந்த மகனையும் இழந்து தனிமையில் தவித்து வருகின்றார். மகனுக்கு அந்த பைக்கை வாங்கிக்கொடுத்து இன்னும் இரண்டு நாள் கூட முடியவில்லை என்று கூறி அந்த தாய் அழுத காட்சி மனதை உலுக்கியது.

tamil cinema

tamil cinema