tamil cinema : உலக அளவில் பாப்புலர் ஆன நடிகையாக இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் படங்களில் அவர் தற்போது நடித்து வந்தாலும் அவர் முதலில் தமிழில் விஜய்யின் தமிழன் படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.
ஒரு பேட்டியில் அவர் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனின் போனை திருடி செய்த மோசமான செயல் பற்றி பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அபிஷேக் பற்றி கேட்டபோது ‘mad’ என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவரது போனை திருடியது உண்மையா என கேட்டதற்கு ‘அவர் தான் என் போனை முதலில் திருடினார். அதற்கு பழிவாங்க தான் நான் திருடினேன்.”
“அந்த போனில் I miss you where have been? You wanna… என ஒரு நடிகைக்கு மெசேஜ் அனுப்பிவிட்டேன்” என பிரியங்கா சொல்ல, அது ப்ரீத்தி ஜிந்தா தான் என தொகுப்பாளர் கண்டுபிடித்துவிட்டார்.
மெசேஜ் அனுப்பிவிட்டு போனை ஆப் செய்து வேனில் ஒளித்துவைத்துவிட்டு ஓடிவிட்டாராம் பிரியங்கா. அந்த மெசேஜ் பார்த்த ப்ரீத்தி ஜிந்தா அதிர்ச்சி ஆகி “what is wrong with you?” என பதில் அனுப்பி இருக்கிறார்.
மெசேஜ் அனுப்பிவிட்டு போனை ஆப் செய்து வேனில் ஒளித்துவைத்துவிட்டு ஓடிவிட்டாராம் பிரியங்கா. அந்த மெசேஜ் பார்த்த ப்ரீத்தி ஜிந்தா அதிர்ச்சி ஆகி “what is wrong with you?” என பதில் அனுப்பி இருக்கிறார்.