2 October, 2023

லாரன்ஸின் துர்கா படத்தின் இரட்டை இயக்குனர்கள் யார் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் தான் ராகவா லாரன்ஸ். இவருடைய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

தற்போது ருத்ரன், அதிகாரம், போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், ‘துர்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.

இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்கவுள்ளதாக ட்விட்டரில் நடிகர் லாரன்ஸ் உறுதி செய்துள்ளார்.

tamil cinema

tamil cinema