tamil cinema : தனுஷ், அமலா பால், பாலிவுட் நடிகை கஜோல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில் கஜோல்’க்கு அசிஸ்டெண்டாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரைசா வில்சன்.
அதனைத் தொடர்ந்து, இவருக்கு பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தையும் அதன் மூலம் சம்பாதித்து விட்டார். பின்னர், சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருந்து வந்த ரைசா, தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல திரைப்படங்களில் நடித்தார்.
பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் bold ஆக நடித்து வரும் ரைசா, உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வெளியாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அவ்வப்போது, வெளிநாட்டிற்கு ட்ரிப் அடிக்கும் ரைசா, அதன் புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

tamil cinema

tamil cinema

tamil cinema