tamil cinema : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னடா வாழ்க்கை இது என தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாராம்.
அதற்கு காரணம் சமீபத்திய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் விவாகரத்து தானாம். ஏற்கனவே அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன் ரஜினிக்கே ஒரு காலத்தில் விவாகரத்து வரும் அளவுக்கு பிரச்சனை வந்ததும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
தன் வாழ்நாளில் பணம் காசு சம்பாதித்தாலும் நிம்மதி இல்லாமல் சுற்றும் பலரில் ரஜினிக்கு முக்கிய இடம் இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். இன்றைய தேதிக்கு அவருடைய வயதில் இருக்கும் நடிகர்கள் பலரும் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டனர். ஆனால் இவரோ இன்றும் பல இளம் நடிகர்களுக்கு சவால் கொடுத்த தன்னுடைய முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இன்றைக்கும் ரஜினிக்கு நூறு கோடி சம்பளம் கொடுத்து படம் எடுக்கும் அளவுக்கு அவர் தன்னுடைய சினிமா கேரியரை உச்சத்தில் வைத்துக் கொண்டுள்ளார். ஆனால் குடும்ப வாழ்க்கை தான் அந்தர சிந்தரை ஆகிவிட்டது. ஏற்கனவே இளைய மகளின் விவாகரத்தை தாங்க முடியாமல் இருந்த ரஜினிக்கு மூத்த மகளின் விவாகரத்தும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டன.
இது உறுதி இருவரிடமும் சமாதானம் பேசியும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என ரஜினி செம அப்செட்டில் இருக்கிறாராம். மேலும் தன்னுடைய நட்பு வட்டாரங்களை அழைத்து எவ்வளவு காசு பணம் சம்பாதித்து என்ன பண்றது, ஒரு நாள் கூட நிம்மதி இல்லை என கண்ணீர் விட்டாராம்