tamil cinema : பெரு நாட்டில் லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா.
இவருக்கு 36 வயதாகிறது. கடந்த 26-ம் தேதி இவரது கார் விபத்துக்குள்ளாகியது. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது ரோசாவும் இன்னொரு நபரும் இறந்துவிட்டதாக பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் 2 பேருக்கும் இறுதி சடங்கு செய்ய முடிவானது. அதற்காக சவப்பெட்டியை தயார் செய்து, அதில் ரோசா சடலத்தையும் தூக்கி வைத்தனர்.
பிறகு, சவபெட்டியை மூடி, கல்லறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அடக்கம் செய்யலாம் என்று சவப்பெட்டியை திறக்க முயன்றபோது சவப்பெட்டி திடீரென அசைந்தது.
இதனால் அதிர்ந்து போன உறவினர்கள் சவப்பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். உடனே ரோசா கண்விழித்துள்ளார். மேலும், அந்த சவப்பெட்டியை உதைத்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு விடயத்தை கூறியுள்ளனர். அவர்கள் விரைந்து வந்து, சவப்பெட்டியுடனேயே ரோசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் ரோசா நிஜமாகவே இறந்துவிட்டார்.
இதனால் உறவினர்கள் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்தனர். கொந்தளித்து வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.
உண்மையிலேயே அப்போது ரோசா கோமாவில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு உயிர் இருந்துள்ளது. பிறகு ரோசா இறந்து விட சடலத்தை அதே இடத்தில் கொண்டு போய் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.