21 March, 2023

சமந்தா – நாக சைதன்யா பிரிவு ஏன்? – முதன்முதலில் மனம் திறந்த நாக சைதன்யா…!

tamil cinema:தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்த சமந்தா, நாக சைதன்யா ஆகியோர் கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டனர். கிருத்துவ முறைப்படியும், தென்னிந்திய இந்துமத சடங்குபடியும் திருமணம் நடந்தது.

நன்றாக சென்றுகொண்டு இருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த அக். மாதம் இருவரும் தார்மீகமாக பிரிவித்தாக அறிவித்தனர். மேலும், நாங்கள் இருவரும் அவரவரின் சொந்த பாதையில் செல்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

tamil cinema

tamil cinema

இந்நிலையில், தந்தை நாகர்ஜூனாவுடன் சேர்ந்து நடித்துள்ள பங்கராஜு திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கையில் பேசிய நாக சைதன்யா, “பிரிவு பரவாயில்லை. அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு இதுவாகும். சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே” என்று தெரிவித்தார்.

விவாகரத்துக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா அதுதொடர்பாக பேசியது இதுவே முதல் முறையாகும்.