21 March, 2023

சைதன்யாவின் 2வது திருமண செய்தியை கேட்டவுடன் கொந்தளித்த சமந்தா..!

tamil cinema : தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தினை கொண்டுள்ளார்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான தனது 4 வருட திருமணத்தை முடித்துக்கொண்டார். இந்த சம்பவம் தென்னிந்திய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இவரது விவாகரத்திற்கு பின்பு பல விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத சமந்தா தனது வேலையில் பயங்கர பிஸியாக இருந்து வருகின்றார்.

சமந்தா தனது ட்வீட்டில், “என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணை பலவீனம் என்றும் தவறாக நினைக்காதீர்கள். கருணைக்கு ஒரு காலாவதி தேதி இருக்கலாம் #JustSaying” என்று பதிவிட்டுள்ளார்.

நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் அது குறித்து இவரிடம் கேள்வி கேட்டு பல விமர்சனங்களை முன்வைத்து வருவதால் இவ்வாறு கோபத்தில் பதிவு வெளியிட்டுள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது.